தந்தைக்கும் மகளுக்குமான உறவு, மகளது ஆசையை நிறைவேற்ற இயலாமல் தவிக்கும் தந்தை என எளிய குடும்பத்தை மையப்படுத்தி மனம் கவரும் வகையில் உருவான படம் ‘ராஜாமகள்.’

தந்தையாக ஆடுகளம் முருகதாஸ், தாயாக வலினா, மகளாக பேபி பிரித்திக்ஷா நடித்த இந்த படத்தை ஹென்றி இயக்கியிருந்தார்.

இந்த படம் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிலையில் நம்மிடம் பேசிய படத்தின் இயக்குநர், ராஜா மகள் படத்தின் ஒளிப்பதிவும் இசையும் சொல்ல வேண்டிய கதையை கச்சிதமாக சொல்லி பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here