‘அயலி’ நட்சத்திரங்களை இயக்கும் வெற்றிவீரன் மகாலிங்கம்!

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான  ‘அயலி’ வெப் சீரிஸ் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியின் அப்பாவாக நடித்த ‘அருவி’ மதன் கதையின் நாயகனாக நடிக்க, அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

‘குக் வித் கோமாளி’ புகழ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்!

சமீபத்தில் இந்த  படத்துக்கான வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது.

நாட்  ரீச்சபிள், மிடில்க்ளாஸ் படங்களில் நடித்த சாய் ரோஹிணி,. உதய்ராஜ், ஸ்ரீ பிரியா, கனிஷ், பேபி ஷிவானி, மாஸ்டர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள வெற்றிவீரன் மகாலிங்கம் இந்த படத்தை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக எழுதி, இயக்கி தயாரிக்க, இணை தயாரிப்பாளரான S.D.சுரேஷ் தயாரிப்பு மேற்பார்வை பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்ப்புத்தாண்டு அன்று படபூஜையுடன் தொடங்கியது.

 

 

மேலும் இப்படத்தை சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்ய, வத்ஷன் இசையமைக்க, வடிவேல்-விமல்ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கின்றனர். இணை இயக்குனர்கள் ரபீக் ராஜா மற்றும் மணிமூர்த்தி, நிர்வாக தயாரிப்பு ராபின் செல்வா, காஸ்டியூம் ரெங்கசாமி, மேக்கப் ரெங்கநாத பிரசாந்த், மக்கள் தொடர்பு V.K சுந்தர், ஸ்டில்ஸ் V.R மணிகண்டன், டிசைனர் V STUDIOS BLESSON என வலுவான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here