இயக்குநர் வெற்றிமாறன், தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கி ஆரோக்கிய உரையாற்றினார்.

‘உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம். நம் வேலை அப்படி. ஆனால், நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம். நண்பர்களுடன் இணைந்து 2000 வரையிலும் கூட செலவிட்டு பார்ட்டி போன்ற விஷயங்களில் நம் நேரத்தை செலவிடுகிறோம் ஆனால் அதிகாலையில் எழுந்து சின்ன சின்ன உடற்பயிற்சிகள் எனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை.

பெண்கள் வீட்டில் வீணாகப் போகிறதே என்று நினைத்தே பழைய உணவுகளை சாப்பிட்டு அவர்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது மீதம் ஆகிவிட்டால் யோசிக்காமல் மற்றவர்களுக்கு கொடுத்து விடுங்கள். கடைசியாக ஆரோக்கியத்தை பற்றி நினைத்து எந்த பயனும் இல்லை.

அதேபோல உணவை சரியாக கணக்கிட்டு சாப்பிட நம்மால் முடியும். பொதுவாகவே முதலில் நார்ச்சத்து கொண்ட ஆகாரங்கள், அடுத்து புரதம் கடைசியாக தான் கார்போஹைட்ரேட் என்னும் வழக்கத்தை எப்போது உணவில் அமர்ந்தாலும் பழக்கப்படுத்திக் கொண்டாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உதாரணத்திற்கு முதலில் காய்கறிகளை எவ்வளவு அதிகமாக எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு அதிகமாக எடுத்துக்கொண்டு அதன் பிறகு சாதம் என வழக்கமாக்கிக் கொள்ளலாம், இது பிரியாணியை எடுத்துக் கொண்டாலும் சரி போதுமானவரை கறி துண்டுகளை முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பிரியாணியை சாப்பிடும்போது சாப்பிடும் அளவும் குறைவாகும். இன்சுலின் அளவிலும் மாற்றங்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளையான சர்க்கரையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் அதுதான் உலகின் அடிமையாக்கும் போதைப் பொருளுக்கு சமம் என்கிறது ஆய்வு முடிவுகள்” என்றார்.

நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் வழங்கி கௌரவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here