சூர்யாவின் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘சூரரைப் போற்று.’
https://x.com/2D_ENTPVTLTD/status/1717489216601690223?s=20
அந்த படம் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற படம் தேசிய விருது அங்கீகாரத்தையும் பெற்றது.
ஒருசில வருடங்கள் கழித்து சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணைகிறது. மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
சூர்யா நடிக்கும் 43-வது படம் என்பதால் படத்துக்கு சூர்யா 43′ என தற்காலிகமாக தலைப்பிட்டுள்ளனர்.
ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படம் இது!
படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா, ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
சூர்யா, சுதா கொங்கரா, ஜீ.வி. பிரகாஷ் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு அறிவிப்பு வெளியான நிலையிலேயே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.