சாலையில் அடிபட்டுக் கிடக்கும் பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்கும் போலீஸுக்கு வரும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை! -‘சூரகன்’ பட விழாவில் இயக்குநர் சதீஷ் கீதா குமார் பேச்சு

புதுமையான கமர்ஷியல் படைப்பாக சதீஷ் கீதா குமார் இயக்கியுள்ள ‘சூரகன்’ படத்தை ‘தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ்’ கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

படத்தில் கார்த்திகேயன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, ‘டேஞ்சர்’ மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஶ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 21; 2023 அன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் சதீஷ் கீதா குமார், ‘‘இது ஆக்சன் படம். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படத்தின் கதை. கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசி இந்தப்படத்தை உருவாக்கினோம்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன், ‘‘தயாரிப்பாளர் கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக பத்திரிகையாளர்களும் மக்களும் கொண்டாடுவார்கள். நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. இந்தப் படத்தின் டிரெய்லர் நன்றாக இருக்கிறது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகை சுபிக்‌ஷா, ‘‘இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து நல்ல கதாபாத்திரம் தந்துள்ளார். இது அற்புதமான டீம். இவர்கள் உழைப்பு கண்டிப்பாக பேசப்படும்” என்றார்.
நடிகை தியா, இந்த படத்தில் என்னுடையது சிறிய ரோல் என்றாலும் கதையின் திருப்புமுனையாக இருக்கும்” என்றார்.

நடிகர் வின்சென்ட் அசோகன், ‘‘இந்த படத்தில் எனக்கு வில்லன் ரோல். நீங்கள் இப்படித் தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும் என்று ஒவ்வொன்றையும் தெளிவாக சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும்” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளரும் நடிகருமான கார்த்திகேயன், கலை இயக்குநர் தினேஷ் மோகன், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி உள்ளிட்டோரும் பேசினார்கள்.

படக்குழு:-
இயக்கம்: சதீஷ் கீதா குமார்
திரைக்கதை: வி.கார்த்திகேயன்
பாடல் வரிகள்: கு.கார்த்திக், திரவ்
நிர்வாகத் தயாரிப்பாளர்: பி.கார்த்திக்
ஒளிப்பதிவு: சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை இயக்குநர்: தினேஷ் மோகன்
இசையமைப்பாளர்: அச்சு ராஜாமணி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here