ஹிருத்திக் ரோஷனின் முதல் 3டி படம் ‘ஃபைட்டர்’ ஜனவரி 25-ம் தேதி வெளியீடு!

ஹிருத்திக் ரோஷன் இந்திய ராணுவ கேப்டனாக ‘லக்ஷ்யா’ படத்தில் தனது முத்திரை பதிக்கும் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சித்தார்த் ஆனந்தின் ‘ஃபைட்டர்’ படத்திற்காக இந்திய பாதுகாப்புப் படை சீருடை அணிந்திருக்கிறார்!

இந்த முறை ஜெட் பைலட்டாக அசத்தவிருக்கிறார். ஷாம்ஷெர் பத்தானியா என்கிற பட்டி வேடத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஃபைட்டர் படத்தில் அதிரடி காட்டப் போகிறார்.

 

இது இயக்குநர் சித்தார்த் ஆனந்தின் லட்சியப் படம் என்று கருதப்படுகிறது. இந்தியாவின் முதல் வான்வழி ஆக்சன் படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு உண்டு

இந்த பாத்திரத்தில் தேசபக்தி மிகுந்த வீர வசனங்களை ஹிருத்திக் ரோஷன் பேசும்போது அது பார்வையாளர்களை வெகுவாக உணர்ச்சி வசப்படச் செய்யும் என்பது உறுதி!

இந்திய விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் சீருடையில் சாதுவாக தெரியும் ஹிருத்திக் ரோஷன் போர் விமானங்களை பறக்க விட்டு சாகச செயல்களில் ஈடுபடும்போது பார்வையாளர்கள் மூச்சடைத்துப் போவார்கள்!

ஃபைட்டர் படத்தின் ட்ரெய்லர், 2019-ல் புல்வாமா தாக்குதலின் பின்னணியை பற்றி பட்டி கதாபாத்திரத்தின் மூலம் காட்டுகிறது. இந்திய விமான படையின் தாக்குதலின் ஒரு பார்வையையும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கடினமான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஜனவரி மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவிருக்கும் நிலையில் டிரெய்லரை நெட்டிசன்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்

இது ஹிருத்திக் ரோஷனின் முதல் 3டி படமாகும். அத்துடன் இது 3டி ஐமேக்ஸ் வடிவத்திலும் வெளியாக உள்ளது.

‘பேங்க் பேங்க்’ 2014 ‘வார்’ 2019 போன்ற வெற்றிகரமான படங்களுக்கு பிறகு ஹிரித்திக் ரோஷன் மற்றும் சித்தார்த் ஆனந்த் ஆகியோரின் பிளாக் பஸ்டர் நடிகர், இயக்குநர் கூட்டணியை இணைக்கிறது ஃபைட்டர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here