காமெடி, சென்டிமென்ட் கலந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி சதாசிவம் சின்னராஜ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘EMI மாதத்தவணை.’
சாய் தான்யா கதாநாயகியாக நடிக்க, பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி ஆகியோரும் இன்னும் பலரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் பேசியபோது, ”வாழ்க்கையில் இப்ப இருக்கிற ஜெனரேஷன்ல பெரும்பாலும் 90% இஎம்ஐ இல்லாம யாரும் இல்லை. அதே மாதிரி 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கணும்னா கூட அதை முழு பணத்தை கொடுத்து யாரும் வாங்கறது இல்ல. இஎம்ஐ ல போட்டு தான் வாங்குறாங்க. இப்போ லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஐகிளாஸ் என அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ இஎம்ஐ ல போட்டு வாங்குறாங்க. இந்த மாதிரி இஎம்ஐ வாங்கணும்னா அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடணும். அப்போதான் தான் அவங்களுக்கு இஎம்ஐல ஈசியா லோன் கிடைக்கும். இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு ரெண்டு மூணு மாசம் தவணை கட்டலைன்னா மேனேஜர்ல இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பாங்க. இதை 90% மக்கள் கண்டிப்பா அனுபவிக்காம இருக்க முடியாது.
இதே மாதிரி தான் நம்ம கதையின் நாயகனும் லவ்வுக்காக கார், பைக் இஎம்ஐ ல ஈஸியா வருதுன்னு வாங்கிவிடுகிறார். திடீர்னு வேலை போயிடுது. இஎம்ஐ கட்ட முடியாமல் மாட்டிக்கொள்கிறார். மூன்று மாதத்திற்கு பிறகு அவரையும், சூரிட்டி போட்ட அவரது நண்பர்களையும் டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கிறாங்க.
இறுதியில் நாயகன் இஎம்ஐ கட்டினாரா இல்லையா, அவரது நண்பர்கள் என் ஆனார்கள் என்பதை காமெடி மற்றும் சென்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறோம். படம் பார்க்கும் ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா இது அவங்க வாழ்க்கையோட கனெக்ட் ஆகும்.
அதே மாதிரி இஎம்ஐ எடுங்க, எடுக்காதீங்கன்னு அட்வைஸ் எல்லாம் நாங்க பண்ணல. இஎம்ஐ எடுத்துட்டு ஒரு மாசம் கட்டலனா என்ன நடக்குதோ அது அப்படியே சொல்லிருக்கோம். அவ்வளவுதான்.
அதே மாதிரி நம்ம தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் என்னும் ஒரு திட்டம் பற்றி கிளைமாக்ஸ்ல சொல்லி இருக்கோம். அது நிறைய மக்களுக்கு நல்ல மெசேஜாக இருக்கும். அனைவரும் உங்களுடைய ஆதரவு கொடுங்க தேங்க்யூ” என்றார்.
சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘என் நண்பனே’ என்ற இசை ஆல்பத்திற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படக்குழு:-
தயாரிப்பு: சபரி புரொடக்ஷன்ஸ் மல்லையன்
ஒளிப்பதிவு: பிரான்சிஸ்
பாடல்கள்: பேரரசு, விவேக்
எடிட்டிங்: விடுதலை படத்தின் எடிட்டர் ஆர் ராமர்
நடன இயக்கம்: தீனா, சுரேஷ் ஜீத்
ஸ்டண்ட்: மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை: தேக்கமலை பாலாஜி
மக்கள் தொடர்பு – மணவை புவன்