காதல், நட்பு, பரபரப்பு என இன்றைய ஐடி உலக இளைஞர்களின் வாழ்வை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தி, ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் வெளியாகி, தினசரி தொடராக 50+ எபிசோட்களை எட்டி, பெரியளவில் வரவேற்பு பெற்ற ‘வேற மாறி ஆபிஸ்’ சீரிஸின் 2வது சீசன் விரைவில் வெளியாகவிருக்கிறது.
ஆர் ஜே விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டன், வி ஜேபார்வதி, ஜனனி அசோக் குமார், சியாமா ஹரிணி, ஆர் ஜே சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் வி ஜே பப்பு உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்திருந்த சீசன் 1, கார்ப்பரேட் வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வினோதங்களைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த கதாபாத்திரங்கள் சீசன் 2-ல் மீண்டும் வருகிறது.
சமீபத்தில் வெளியான சீசன் 2 டீசர், அதில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், என்னவெல்லாம் இருக்குமென்பதை செம்ம கலாட்டாவுடன் சிரிக்கச் சிரிக்க வெளிப்படுத்தியது.
ரசிகர்களை இந்த சீரிஸ் சீட்டின் நுனியில் அமர வைக்கும், பரபர திருப்பங்களுடன், ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தின் உலகத்தை ஆராயும், வகையில், அனைவரும் ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்த்தியது.
முதல் சீசனில் நடித்தவர்கள் தவிர ரவீனா தாஹா, ஜெய்சீலன், சப்னா ஐயர், விஸ்வ மித்ரன் ஆகியோர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சுவாரஸ்யமான இந்த சீரிஸை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.