அநியாய அக்கிரமங்களை ரசித்து ருசித்து செய்யும் வில்லனுக்கும் அநியாயத்தைக் கண்டால் ஆவேசப்படுகிற ஹீரோவுக்குமான மோதல் என்ற, ஆக்சன் கதைக்கான வழக்கமான டெம்ப்ளேட்டில் ‘சூர்யாவின் சனிக்கிழமை.’
சோகுலபாலம் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தயா, அந்த பகுதி மக்களிடம் கொடூரமாக நடந்து கொள்வதை தொழிலாக வைத்திருக்கிறார். தயாவின் அந்த ராட்சசத் தனத்தை தனது காதலி மூலம் தெரிந்துகொள்ளும் நாயகன் சூர்யா, சோகுலபாலம் மக்களைக் காக்கும் ரட்சகனாக மாற தீர்மானிக்கிறார். அரக்க குணத்துடனும் அதிகார பலத்துடனும் இருக்கும் தயாவை, சனிக்கிழமை மட்டுமே ஆத்திரப்படுகிற சூர்யாவின் ஹீரோயிஸம் எப்படியெல்லாம் அடக்கியாள்கிறது என்பதே கதையின் தொடர்ச்சி… இயக்கம் விவேக் ஆத்ரேயா