கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான கதைசொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த அற்புத சீரிஸ், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் உமேஷ் பிஸ்ட்டால் இயக்கத்தில், உருவான ‘கியாரா கியாரா’ ஏற்கனவே ZEE5 இல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் ZEE5 இல் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடராகும்.
உத்தரகாண்ட் மலைகளில் ‘கியாரா கியாரா’ கதை விரிகிறது, அங்கு யுக் ஆர்யா (ராகவ் ஜூயல்) என்ற போலீஸ் அதிகாரி, கடந்த கால போலீஸ் அதிகாரியான ஷௌர்யா அன்த்வால் (தைரிய கர்வா) உடன், மிகத்துல்லியமாக 11 மணிக்கு நொடிகள் மட்டும் கடந்த காலத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வாக்கி-டாக்கியைக் கண்டுபிடிக்கிறார். 15 ஆண்டுகளாக ஊரை ஆட்டிப்படைத்த அதிதி என்ற இளம்பெண்ணின் கொலை உட்படத் தீர்க்கப்படாத குற்றங்களைத் தீர்க்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஒன்றாக, அவர்கள் கடந்த காலத்தை மாற்றுகிறார்கள், இது நிகழ்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.