வித்யா பிரதீப்,ரிஷி ரித்விக், ராஜ்குமார், பிக்பாஸ் டேணி,நாஞ்சில் சம்பத் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் திரும்பிப்பார்.’
கொம்பு’ படத்தின் இயக்குனர் இ.இப்ராஹீம் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் எனப்படும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர்கள் அமீர், சிம்பு தேவன், மடோனே அஸ்வின், தயாரிப்பாளர் சி.வி. குமார், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ், நடிகர்கள் விக்ரம் பிரபு ,மஹத், நடிகைகள் யாஷிகா ஆனந்த், சாந்தினி மற்றும் பல திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யுத்தகளத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ‘நிழல் நடை’ ( Shadow Walk) என்ற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இப்படத்துக்கு தேவ்குரு இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு, திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்:-
ஒளிப்பதிவு சக்திப்பிரியன், படத்தொகுப்பு பி.ஆர்.பிரகாஷ், ஸ்டன்ட் ஜாக்குவார் தங்கம் மற்றும் விஜய் ஜாக்குவார்,நடனம் சசிகுமார், ஆடை வடிவமைப்பு தனா, ஆடியோ கிராபர் விபி.சுகவேதன்,
மேக்கப் சசிகலா, தயாரிப்பு நிர்வாகம் இரா.சரவணன், மக்கள் தொடர்பு- வேலு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.