காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான், சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அவள் பெயர் ரஜ்னி.’விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த படம் இது.
இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் துப்பறியும் வகை திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ளது. சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில், நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.
திரில்லர் திரைப்படத்திற்கான அம்சங்களுடன் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.