புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 9 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘அக்னிப் பரீட்சை.’
அரசியல் தலைவர்களை நேருக்கு நேராக அமர்த்தி, அரசியல் சமூக பிரச்னைகள் ஆகியவை குறித்து அவர்களது நிலைப்பாடுகள், அது குறித்து எழுப்பபடும் ஐயங்கள் ஆகியவற்றை துல்லியமான கேள்விகள் மூலம் விவாதிக்கும் நிகழ்ச்சி இது.இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் தரும் பதில்கள் பல நேரங்களில் அடுத்து வரும் வாரங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன.
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமன்றி பிற மாநில முதலமைச்சர்கள், முக்கிய பிரச்னைகளில் களமாடும் கள பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை அரசியல் பிரிவு ஆசிரியர் க.கார்த்திகேயன் நெறிப்படுத்துகிறார்.
ஒரு பிரச்னை குறித்த பல்வேறு பரிமாணங்கள் மட்டுமின்றி அவர் தொடர்பாக எழுப்படும் சர்ச்சைகள் குறித்து அவரிடம் இருந்தே விடைகளை பெறுவதே இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம்!