‘அஸ்வின்ஸ்’ சூப்பர் நேச்சுரல் த்ரில்லர். ஜூன் 9-ம் தேதி சக்தி ஃபிலிம் பேக்டரி ரிலீஸ்!

வசந்த் ரவி, விமலா ராமன், ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படப்புகழ் முரளிதரன், சரஸ் மேனன், ‘நிலா காலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற உதய தீப், மலினா உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் ‘அஸ்வின்ஸ்.’

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ள, தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் இந்த படம் ஜூன் 9-ம் தேதி வெளியாகிறது. திறமையான கலைஞர்களைக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஏற்கனவே வர்த்தக வட்டாரங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிக்ஸ் திரையரங்குகளுக்குப் பிந்தைய OTT உரிமையைப் பெற்றபோது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டது படம் இன்னும் பல புதிய உயரங்களை அடைய உதவியது. தற்போது தமிழக திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி பெற்றுள்ளதால், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்குகிறார். பிரவீன் டேனியல் இணைந்து தயாரித்துள்ளார். விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். எட்வின் சாகே ஒளிப்பதிவையும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பையும் கையாள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here