‘ஏலியன்ஸ் 2042′ எப்படியிருக்கு?

‘ஏலியன்ஸ்’ எனப்படும் வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கதைக்களமாக கொண்ட படங்களுக்கு உலகமெங்குமுள்ள சினிமா ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருக்கிறது.

‘அவதார்’ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ஏலியன்ஸ் (1986) அன்றிலிருந்து இன்றுவரை சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்தவகை ஏலியன்ஸ் சப்ஜெக்டில் இதுவரை பல படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன.

அதே ஏலியன்ஸை மையப்படுத்தி 2042-ம் ஆண்டு நடப்பது போல் திரைக்கதையமைத்து Huang Zhuasheng இயக்கியுள்ள படம் ‘ஏலியன்ஸ் 2042.’இந்த படம், மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘777 பிக்சர்ஸ்’ மூலம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளில் வெளியிடப்படுகிறது.Ren Tianye, Zhang Zhilu, Qu Niciren உள்ளிட்டோரின் நடித்துள்ளா இந்த படத்தில் தாய் பூமியில் காணப்படும் நீர் ஆதாரங்களை சூறையாடும் நோக்கில், ஏலியன்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்தின் மீதும் ஒரு பெரிய தாக்குதலை நடத்துகிறார்கள். ஏலியன்களுக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒருங்கிணைகிறார்கள். மற்ற அனைத்து இராணுவப் படைகளும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, விட்டுச் சென்ற சீன இராணுவமும் தோற்கடிக்கப்படுகிறது.தப்பிப் பிழைத்தவர்களில் செங் லிங் என்ற ஆர்வமுள்ள இளைஞர் ஒருவர் காவோ ரெனுடன் காதலில் விழுகிறார். தனது காதலியின் மீதான காதலைத் தொடரும்போது, செங்கிற்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும்படியான கட்டாயம் ஏற்படுகிறது.
வேற்றுகிரகவாசிகளால் மனித இனத்தின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பொறுப்பை ஏற்க நேர்கிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதே கதையின் போக்கு.

வினோதமான விலங்கு போன்ற தோற்றத்தோடு உருவாக்கப்பட்ட ஏலியன், தன் மீது லட்சக்கணக்கான குண்டுகள் பாய்ந்தாலும் அழியாமல் மனிதர்களை தாக்க துரத்துகிற காட்சிகள் படத்துக்கு பரபரப்பூட்டுகிறது.
அந்த உயிரினத்தை வைத்தே அவற்றை அழிக்க வகுக்கும் வியூகங்கள் படத்தின் விறுவிறுப்பான அத்தியாயங்கள். இசையின் மிரட்டல், கதை நகரும் நிலப்பரப்பும் காட்சிகளின் உருவாக்கமும் குறிப்பாக நிலத்துக்குள் இருக்கும் இரும்புக் கோட்டையும் அத்தனை பிரமாண்டம்.

கிளைமாக்ஸ் நெருங்கும்போது நூற்றுக்கணக்கான ஏலியன்கள் மனிதர்களை நோக்கிப் பாயும்போது பார்போரின் கண்கள் வியப்புக்குள் விழுவது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here