விமர்சனங்களில் பாராட்டு; நிரம்பும் தியேட்டர்கள்… வசூலில் சாதனை படைக்கும் ‘அடியே.’

ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘அடியே’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூல் செய்த இந்த படம், இரண்டாவது நாள் அதைவிட கூடுதலாகவும், மூன்றாவது நாள் அதைவிட கூடுதலாகவும் வசூலித்து இந்த வாரம் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக இடம்பிடித்திருக்கிறது.

மட்டுமல்லாது வரும் செப்டம்பர் 1-ம்தேதி முதல் உலக நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது. அதன் பிறகு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி, மல்டிவெர்ஸ், பேரலல் யுனிவெர்ஸ், டைம் டிராவல், டைம் லூப் என இளைய தலைமுறையைக் கவரும் அறிவியல் அம்சங்கள், சுவாரசியமான காதல் என பின்னப்பட்ட திரைக்கதையால் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிரமாண்டமான வெற்றியை எட்டிப்பிடித்து வருகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து படத்தை தயாரித்த மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கி முன்னணி பட தயாரிப்பு நிறுவனமாக உயரும் என்பது உறுதியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here