புதுமையான அனுபவத்துக்கு தயாராக தூண்டும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ பட டீசர்!

ரன்பீர்கபூர் நடிக்க, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், புதுமையான, அதிரடியான, ரசிகர்கள் நினைத்துப் பார்க்காத அனுபவத்தை தரும் வகையில் உருவாகியுள்ள படம் ‘அனிமல்.’

ரன்பீர் கபூருடன் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசரில் படத்தின் அதிரடியான களம், உயிர்ப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. ரன்பீர் கபூரின் பிறந்தநாள் கொண்ட்டாட்டமாக இந்த டீசர் வெளியாகியிருப்பது கூடுதல் உற்சாகத்தை சேர்க்கிறது.

படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தை பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here