உலகெங்கும் போரின் தாக்கங்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் ‘அவனிடம் சொல்வேன்’ தனியிசைப் பாடல் வெளியீடு!

தனி இசைக் கலைஞர்களை ஆதரிப்பதற்காக, பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையில், ‘சைவம்’ பட பாடலுக்காக தேசிய்ட விருது பெற்ற பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணனின் (பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள்) குரலில் ‘அவனிடம் சொல்வேன்’ என்ற பாடல் இத்தளத்தில் வெளியாகியுள்ளது.

உலகெங்கும் போரின் தாக்கங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த அவலச் சூழலால் குழந்தைகளின் வாழ்க்கை எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதை ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தும் வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை வடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here