அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது. கற்பனை, காதல், நகைச்சுவை என கமர்சியல் அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.
ஆர் எஸ் இன்போடேயின்மெண்ட், 24AM ஸ்டுடியோஸ், மற்றும் ஒரு ஊரிலே ஒரு பிலிம் ஹவுஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் உதவி இயக்குநராகவும் நிர்வாக தயாரிப்பாளராகவும் தசாப்த கால அனுபவமுள்ள அஸ்வின் கந்தசாமி இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படக்குழு:
எழுத்து, இயக்கம் : அஸ்வின் கந்தசாமி
தயாரிப்பாளர்கள் : குஷ்பு சுந்தர் & ஆர் மதன் குமார்
தயாரிப்பு : அவ்னி மூவிஸ் & பென்ஸ் மீடியா
ஒளிப்பதிவு : சாந்தகுமார் சக்ரவர்த்தி
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
தயாரிப்பு வடிவமைப்பு : செந்தில் ராகவன்
நடன இயக்கம் : பிருந்தா
சண்டைப் பயிற்சி இயக்கம் : சக்தி சரவணன்
ஆடை வடிவமைப்பு : சாய் ஸ்ருதி
DI : G பாலாஜி
VFX : ஃபாசில் முஹ்மத்
நிர்வாக தயாரிப்பாளர் : அனந்திதா சுந்தர்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்