கவிஞர் வி.ஜே.பி. ரகுபதியின் வரிகளில், கானா பாலா குரலில், பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு ‘தீட்டு’ என்ற துள்ளல் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகளுடன் கூடிய ஆல்பம் பாடல் உருவாகி வருகிறது.
‘சுபம் புரொடக்சன்’ சார்பில் நவீன் லக்ஷ்மன் மற்றும் அருண்குமார் தயாரிக்கும் இந்த ஆல்பத்தில் நவீன் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஆதேஷ் பாலா முதன் முறையாக நடனமாடி நடித்து அசத்தியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரதி என்ற இளம் நடிகை நடனமாடியிருக்கிறார்.
இந்த பாடலுக்கு, மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.
பப்ஜி மற்றும் சில பெயரிடப்படாத படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
இந்த ஆல்பத்தை இயக்கியுள்ள நவீன் முன்பு ‘படைத்தலைவி’ என்ற தலைப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதாக இயக்கிய குறும்படம் சமூக வலைதளத்தில் பெரியளவில் வரவேற்பு பெற்றது!