இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில்,
‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழி படத்தில் நடிகர் ஆரி இணைந்துள்ளார். முதன்முறையாக ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்!.
‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ போன்ற படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய ஆரி, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் உணர்ச்சி பூர்வமான நடிப்பையும், திரையில் தனது வலிமையான ஆளுமையையும் கொண்டு வருபவர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காவலராக அவர் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி அவரது நடிப்பின் புதிய பரிமாணமாக இருக்கும் – இது ஆக்ரோஷமும் , தைரியமும், நேர்மையும் கொண்ட ஒரு கதாபாத்திரம்.
இயக்குனர் விஜய் மில்டன் கூறும் போது, “ஆரி பார்ப்பதற்கு அமைதியாக தோன்றினாலும், உள்ளுக்குள் நெருப்பு போன்றவர். அந்த அமைதித் தீ இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது வெறும் சாதாரண காவலர் வேடமல்ல – உணர்ச்சிகளால் நிரம்பிய, பன்முகத்தன்மை கொண்ட நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதற்கேற்ப ஆரி சரியான தேர்வாக இருந்தார்” என்றார்.
இந்த கதையில் ஆரியின் கதாபாத்திரம் ஒரு எளிய காவலராக இருந்து உயர் பதவிக்கு உயரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது விஜய் மில்டனின் ‘கோளி சோடா’ திரைப்படங்களில் காணப்படும் சாதாரண கதாபாத்திரங்களின் அசுரவேகத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. கதையின் இந்த வளரச்சி கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுப்பது மட்டுமல்லாமல், இயக்குனருக்கு ஒரு ஆணித்தரமான வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்திற்காக தெலுங்கு நடிகர் ராஜ் தருண் முதன் முதலில் தமிழில் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பும் மற்றும் இன்றைய இளைஞர்களின் இசை sensation ‘பால் டப்பா’ நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பும் வந்ததும் படத்தைப் பற்றிய ஆவலை இது அதிகரிக்கச் செய்தது.இப்படி ஒவ்வொரு நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் வெளிவரும் போதும், இந்த படத்தின் மீதான ஆர்வம் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.
இப்படத்தின் தலைப்பு ஜூன் 15 அன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். மேலும் இந்தப் படத்தின் கதை நம்மைச் சுற்றியுள்ள கதாப்பாத்திரங்கள் மற்றும் சமூக உணர்வுகளை கொண்ட ஒரு உணர்ச்சி பூர்வமான கதையாக இருக்கும் – இது விஜய் மில்டனின் படைப்புகளின் முக்கிய படைப்பாகும்.
படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில்…