நகைச்சுவையும் வாழ்க்கைப் பாடங்களும் கலந்த மறக்கமுடியாத பயணத்திற்கு இட்டுச் செல்லும் விதத்தில் உருவாக்கப்பட்ட ‘ஆலப்புழா ஜிம்கானா’ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, இப்போது ஜூன் 13 முதல் Sony LIV ஓ டி டி தளத்தில் களமிறங்குகிறது.
இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லன்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் சேர பொய்யாக குத்துச்சண்டை ஒதுக்கீட்டின் மூலம், ஒரு வழியாக தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அவனும், அவனைப் போலவே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களும், கடினமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி அளிக்கும் கோச் ஆண்டனி ஜோஷுவா (லூக்மேன் அவரன்)வை சந்திக்கிறார்கள். அவர் கடின உழைப்பும், வியர்வையும், உண்மையான சண்டையையும் வலியுறுத்துபவர். ஆரம்பத்தில் ஒரு குறுக்கு வழியாக இருந்தது, விரைவில் வியர்வை, சுயவிழிப்பு மற்றும் உயிருள்ள நட்புறவின் ஒரு போராளியின் பயணமாக மாறுகிறது.
தன் பாத்திரத்தைப் பற்றி பேசும் போது, நஸ்லன் பேசியபோது “ஆலப்புழா ஜிம்கானாவில் ஜோஜோ ஜான்சனாக நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்க, எனது சொந்த பலவீனங்கள் மற்றும் வலிமைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது. இந்தப்
படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். ஓடிடி வெளியீடு மூலம், இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன்” என்றார்.
காலித் ரஹ்மான் இயக்கி, காலித் ரஹ்மான், ஜோபின் ஜார்ஜ், சமீர் கரட் மற்றும் சுபீஷ் கண்ணஞ்சேரி இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், நஸ்லன், லூக்மேன் அவரன், கணபதி எஸ். பொடுவால், சந்தீப் பிரதீப், அனகா ரவி, பிராங்கோ பிரான்சிஸ், பேபி ஜீன் மற்றும் சிவ ஹரிகரன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்களின் நடிப்புடன், புத்துணர்ச்சியும் குழப்பமும் கலந்து களைகட்டும் ஒரு விருந்தாக திகழ்கிறது.
https://www.instagram.com/reel/DKjuLAfxQTZ/?utm_source=ig_web_copy_link