காதல், ஆன்மிகம் கலந்த கதைக்களத்தில் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி ஹீரோவாக நடிக்க, மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ‘ஆலன்.’

ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா கதாநாயகியாக நடிக்க, விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெராடி, அருவி மதன், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘3S பிக்சர்ஸ்’ சிவா.ஆர் தயாரித்து இயக்க, படத்தின் காட்சிகள் தமிழகத்தில் கொடைக்கானல், திருநெல்வேலி, காசி உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் படமாக்கப்பட்டு, படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அதையடுத்து பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

‘ஆலன்’ என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதிலிருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம்தான் இப்படம்.

வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல், ஆன்மிகம், எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு: விந்தன் ஸ்டாலின்
இசை: மனோஜ் கிருஷ்ணா
கலை இயக்குநர்: கே.உதயகுமார்
ஸ்டண்ட்: மெட்ரோ மகேஷ்
நடனம் : ராதிகா, தஷ்தா
மக்கள் தொடர்பு: யுவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here