இந்தியாவுக்காக உயிரிழந்த ராணுவ வீரரை மையப்படுத்திய கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!| பிறந்தநாளில் தலைப்பு வெளியாகி ரசிகர்கள் உற்சாகம்!

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில், அவர் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு ‘அமரன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

இந்திய நாட்டுக்காக உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நீண்ட நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு, கவனமாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். சண்டைக்காட்சிகளும், உணர்வுபூர்வமான காட்சிகளும் மிகச்சரியான கலவையாக அமைந்திருக்கிறது. இது நிச்சயமாக தமிழ் மற்றும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று, அட்டகாசமான நடிப்பை வழங்க, அவருடன் முதன் முறையாக இணைந்து நடிக்கும் சாய் பல்லவி அமர்க்களமான நடிப்பை வழங்கியுள்ளாராம்.

உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், சண்டைக்காட்சி இயக்குனர் ஸ்டீஃபன் ரிச்டர், உடை வடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகிய இந்த மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு படத்தில் இருக்கிறது.

சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுகு திரையுலகில் தங்கள் முதல் தயாரிப்பான ‘மேஜர்’ மூலம் மிகுந்த புகழ்பெற்றவர்கள்,இப்போது ‘அமரன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைகிறார்கள். இந்தப் படமும் இந்தியாவையும் அதன் கதாநாயகர்களையும் கொண்டாடும் விதமாக அமைந்து, உலகெங்கும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here