டிஜிட்டல் விஷன் யூ டியூபர் மகேஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடித்துள்ள படம் ‘ஆண்டவன்.’ கே.பாக்கியராஜ் கலெக்டராக நடித்துள்ளார்.
வி.வில்லி திருக்கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ கந்தசாமி, எம்.கே.ஆர், முத்துச்செல்வம், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கி ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தை ‘வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ்’ தயாரித்துள்ளது. முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்!
ஒருவர் கஷ்டத்தில் சரியான நேரத்தில் யார் உதவுகிறாரோ அவரே ஆண்டவனாகப் பார்க்கப்படுகிறார் என்பதே படத்தின் கதை.
நாட்டில் ஒருபுறம் நகரங்கள் வாழ்கிறது. மறுபுறம் கிராமங்கள் அழிந்து கொண்டு வருகிறது. கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழவையுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறது இந்த படம்.
மகி பாலன் கேமராவை கையாள, கபிலேஷ்வர், சார்லஸ்தனா இருவரும் இசையமைத்துள்ளனர். எடிட்டிங் லெட்சுமணன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
‘ஆண்டவன்’ விரைவில் திரையில் தெரிவார் என்கிறது படக்குழு.