இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் ‘அரிசி.’
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு.
இன்றைய சமூகத்தில் இருக்கிற உணவு சார்ந்த அரசியலை, விவசாயத்தின் உண்மைகளை அழுத்தமாக பேசும் இந்த படைப்பில் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட் நம் பாரம்பரியத்தை அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஆழமான திரைக்கதையுடன் உருவாக்கி படத்தை இயக்கியுள்ளார் எஸ் ஏ விஜயகுமார்.
இந்த படத்தின் கதையைக் கேட்டு அசந்துபோன தோழர் இரா.முத்தரசன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, இக்காலச் சூழலுக்கேற்ற மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை ஏற்றுள்ளார் சமுத்திரகனி.
படத்தின் காட்சிகள் விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள், பட வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில் விரைவில் வெளியாகும்.
படக்குழு:
தயாரிப்பு – மோனிகா புரொடக்சன்ஸ் பி. சண்முகம்
இணைத் தயாரிப்பு – எஸ் எம் பிரபாகரன், மகேந்திர பிரசாத்
இசை -இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு – ஜான்சன்
எடிட்டிங் – சதீஷ் குரோசோவா
நடனம் – தினா மாஸ்டர்
சண்டைப் பயிற்சி: வீர் விஜய்
கலை இயக்கம் – சேது ரமேஷ்
டிசைன்ஸ் – அஞ்சலை முருகன்