பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தையும் மக்களுடன் அவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களையும், திருப்பூரைச் சார்ந்த ஜெயப்பிரபா நவீன் தனது குழுவுடன் இணைந்து ஆவணப் படமாக எடுத்திருந்தார். அதை அமர் பிரசாத் ரெட்டி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை பற்றிய சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை உள்ளடக்கிய அந்த ஆவணப்படம் இணையத்தில் வரவேற்பை குவித்து வருகிறது.