இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தளத்தை அறிமுகப்படுத்தினார்.
இது டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும்.கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும், பணமாக்கவும் இந்த தளம் பயன்படும். அதாவது இசை, கலைகள் போன்றவற்றின் பலன்களை நேரடியாக அந்தந்த திறமையாளர்களுக்கு வழங்குகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார்.
பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும்.
HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.
இசைப்புயல், கற்றார் என்ற தலைப்பை எங்கிருந்து பிடித்தார்?
‘கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்’ என்ற திருக்குறளிலிலிருந்து…