திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் இல்லத் திருமண வரவேற்பு விழா. முதல்வர் வாழ்த்து; பல்துறை பிரபலங்கள் திரளாக பங்கேற்பு!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தம்பதிகளின் மகள் மீனாட்சி – பெரியகருப்பன் தம்பதிகளின் மகன் அண்ணாமலை – அபிராமி திருமண வரவேற்பு சென்னை கிண்டி ஐ.டி.சி.கிராண்ட் சோழாவில் 05.02.2023 அன்று முற்பகல் நடைபெற்றது.

தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னரும், புசுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் ,முன்னாள் மத்திய அமைச்சர்  ஜி.கே.வாசன், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நடிகர், நடிகைகள் சிவகுமார், பிரபு, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தம்பி ராமையா, கருணாஸ், பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், திரைப்பட தாயாரிப்பாளர்கள்
என்.இராமசாமி முரளி, கதிரேசன், கலைப்புலி தாணு
R.B.செளத்ரி, சிவஸ்ரீ சினிவாசன், டி.சிவா,கே.ராஜன்
பைனான்சியரும், தயாரிப்பாளருமான அன்புசெழியன்,
ரவி கொட்டக்காரா, விநியோகஸ்தர் டி.ஏ.அருள்பதி, ரோகிணி தியேட்டர் ஆர்.பன்னீர் செல்வம், காட்ரகட்டா பிரசாத், விநியோகஸ்தர் அழகர், எச். முரளி, பிரமிட் நடராஜன உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரமுகர்களும் தொழிலதிபர்களும், வர்த்தக பிரமுகர்களும் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here