செல்லாவின் நிலத்தில் தீ… மார்ச் 10 முதல் சோனி லிவ்வில் பரபரப்பூட்ட வருகிறது ‘ஆக்ஸிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ.’

சுகன் ஜெய் எழுதி இயக்கி, வரும் மார்ச் 10-ம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இடம்பெறவிருக்கிற நிகழ்ச்சி ‘ஆக்ஸிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ.’

இதில் வைபவ், ரம்யா பாண்டியன், படவா கோபி, வினோதினி வைத்யநாதன், சுட்டி அரவிந்த் மற்றும் கல்லோரி வினோத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதன் டீசர் இப்போது வெளியாகியுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியின் கதை இசை மூலமாக சொல்லப்பட்டுள்ளது. இது பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் அந்த கதாபாத்திரங்களோடு தொடர்பு கொள்ளவும் உதவுகிறது.

செல்லா என்பவர் தனது முன்னோர்களிடமிருந்து பெற்ற சிறிதளவு இடத்தை வைத்துள்ளார். விவசாயம் உட்பட எதிலும் ஆர்வமில்லாமல் இருக்கிறார். ஒருநாள் தவறுதலாக தனது நிலத்தில் தீப்பிடித்ததால் அவருடைய மொத்தப் பார்வையும் மாறியது. நிலத்தைக் காப்பாற்றும் முயற்சியில், செல்லா தனது நட்பு, விவசாயம் மற்றும் காதலில் ஏமாற்று வித்தையை கையாள்கிறார். அதனால் சிக்கலை எதிர்கொள்வாரா, சாமர்த்தியமாக தப்பிப்பாரா என்பதே கதை.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் பாலாஜி மோகன்,  டிரெண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து தாயாரித்துள்ள நிகழ்ச்சி ராஜா ராமமூர்த்தி தயாரித்துள்ளார். சஞ்சய் சுபாஷ்சந்திரன் மற்றும் வித்யா சுகுமாரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here