அக்கரன் சினிமா விமர்சனம்

குறுக்கு வழியில் பதவிக்கு வர ஆசைப்படுகிறவர்கள் எந்த லெவலுக்கும் இறங்குவார்கள் என்பதற்கு உதாரணமாய் பல படங்கள் வந்தாயிற்று. அந்த வரிசையில் மற்றுமொரு படமாய் ‘அக்கரன்.’

இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான எம் எஸ் பாஸ்கர், இரண்டு இளைஞர்களை கடத்தி வந்து, துன்புறுத்தி காணாமல் போன தன் மகளுக்கு என்னவானது என விசாரிக்கிறார். அவர்கள், நடந்தவற்றை சொல்லச் சொல்ல அந்த  தந்தை மனம் உடைகிறார்.

மகளுக்கு நடந்தது என்ன? கடத்தப்பட்ட இளைஞர்களுக்கு  என்னவாகிறது? இதற்கான பதில்கள் திரைக்கதையில் இயக்கம் அருண் கே பிரசாத்

எம் எஸ் பாஸ்கர் இளைஞர்களை கடத்துவதில் காட்டுகிற சாமர்த்தியமும், அவர்களிடமிருந்து உண்மைகளை வர வைப்பதற்கு கையாளும் யுக்திகளும் பெரிதாய் ஈர்க்காவிட்டாலும், பாசக்கார தந்தையாக அவரது தவிப்பான நடிப்பு கவர்கிறது.

எம் எஸ் பாஸ்கரின் மகள்களாக வருகிற வெண்பா, பிரியதர்ஷினி, வெண்பாவின் மனதுக்கு பிடித்தமானவராக வருகிற விஷ்வந்த், அரசியல்வாதியாக வருகிற நமோ நாராயணன், வில்லன்களாக வருகிற வில்லன்களாக ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் என அத்தனைப் பேரின் நடிப்பும் நேர்த்தி.

பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு கச்சிதம்.

வில்லன்களை பசை தடவிய ஷோபாவில் ஒட்டவைத்து தண்டிப்பது தமிழ் சினிமாவில் இதுவரை காணாதது. கிளைமாக்ஸில் விஷ்வந்தை வைத்து தந்திருக்கும் டிவிஸ்ட் ஆச்சரியப்படுத்தும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here