ஆர்யா, சந்தானம் நடிக்கும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில்!

ராஜேஷ் எம் இயக்கி பல வருடங்கள் முன் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு பெரியளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ராஜேஷ் எம் இயக்கிய மற்றொரு வெற்றிப் படைப்பான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ படமும் ரி ரீலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை வரும் மார்ச் 22-ம் தேதி அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. சிவா மனசுல சக்தி’யைத் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன்’ படமும் ரிலீஸாவதால் இயக்குநர் ராஜேஷ் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ வெளியானபோதே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யா திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக அமைந்தது.

பல வெற்றிப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரீ ரிலீஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இயக்குநர் ராஜேஷ்.எம்

தற்போது இயக்குநர் ராஜேஷ்.எம், நடிகர் ஜெயம்ரவி நடிப்பில், SCREEN SCENE MEDIA தயாரிப்பில், ‘பிரதர்’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில், அதர்வா மற்றும் அதிதி ஷ்ங்கர் நடிக்கும், புதிய படம் ஒன்றையும் இயக்கவுள்ளார். அதற்கான ஆரம்பகட்ட முன் தயாரிப்பு பணிகளையும் தற்போது செய்துவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here