இதுவரை காணாத அனிமேஷன் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாக உருவான எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ தொடர்! டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 10 முதல் ஸ்ட்ரீமிங்!

பாகுபலி இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஃபேண்டஸி தொடர்களில் ஒன்றாகும், இது ஒரு கதை மட்டுமல்ல, ஒரு பிரபஞ்சம். பாகுபலி உலகில் கேள்விப்படாத, காணாத, சாட்சியமில்லாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்’ இந்த ஃபிரான்சைஸியின் முன்பகுதியை அறிவிக்கிறது. ‘பாகுபலி: தி கிரவுன் ஆஃப் பிளட்’, பாகுபலி மற்றும் பல்லால்தேவ் ‘ரக்தேவா’ என்று அறியப்படும் மர்மமான போர்தலைவனுக்கு எதிராக பிரம்மாண்டமான மகிஷ்மதி ராஜ்ஜியத்தையும் சிம்மாசனத்தையும் பாதுகாக்க கைகோர்க்கும் கதையாகும்.

 

கிராஃபிக் இந்தியா மற்றும் அர்கா மீடியா தயாரிப்பான பாகுபலி : கிரவுன் ஆஃப் பிளட், தயாரிப்பில் தொலைநோக்கு பார்வை கொண்ட S.S.ராஜமௌலி, ஷரத் தேவராஜன் & ஷோபு யார்லகட்டா , ஜீவன் J. காங் & நவின் ஜான் ஆகியோரால் இயக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது, இந்த அற்புதமான காவியக்கதை அற்புதமான சாகசம், சகோதரத்துவம், துரோகம், முரண்பாடு மற்றும் வீரத்துடன் பார்வையாளர்களை இதுவரைக் காணாத அனிமேஷன் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் உறுதியளிக்கிறது.

பாகுபலியின் பிரம்மாண்டம், சகோதரத்துவம் மற்றும் மோதலின் கதையைக் காண, ஆற்றல் நிரம்பிய இந்த அதிரடித் தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 10, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here