கோடரி, ரத்தம்… நடிகர் ‘கட்டிமேளா’ ரக்ஷ்ராம் பிறந்தநாளில் ‘பர்மா’ படத்தின் மிரட்டல் போஸ்டர் வெளியீடு!

‘கட்டிமேளா’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர் ரக்ஷ் ராம். இன்றைய அவரது பிறந்தநாளை முன்னிட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பர்மா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் இரண்டு கோடாரிகளை ஏந்தியபடி ரத்தம் தோய்ந்த தோற்றத்தில் ரக்ஷ்ராம் தோன்றி சக்தி வாய்ந்த ஒரு பஞ்ச் வசனம் பேசுகிறார். படம் முழு நீள கமர்சியல் பொழுதுபோக்கு படைப்பாக உருவாக உள்ளது.

படத்தை சேத்தன் குமார் இயக்குகிறார். ரக்ஷ் ராம், தனது ஸ்ரீ சாய் ஆஞ்சநேயா நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்த படம் தொலைக்காட்சி நடிகர் ரக்ஷ் ராமை பான் இந்திய நட்சத்திரமாக மாற்றியுள்ளது.

‘ஜேம்ஸ்’ எனும் திரைப்படத்தைத் தவிர, இயக்குநர் சேத்தன் குமாரின் அனைத்து திரைப்படங்களும், ‘பா’ என்ற எழுத்தில் தொடங்குவது தான் அவரது வெற்றி பெற்ற சினிமா பாணியாகும். ‘பஹதூர்’, ‘பஜ்ரங்கி’, ‘பாரதே’ என அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தவை. அவரது சமீபத்திய படமான ‘பர்மா’ படத்தின் மூலம் சேத்தன் குமார் மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறுவதற்கு தயாராகி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பான் இந்திய அளவிலான வெளியீட்டிற்கு தயாராகி வரும் இப்படம், பிரம்மாண்டமான படைப்பாகவும் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு வி. ஹரிகிருஷ்ணா இசையமைக்கிறார். இந்தக் கூட்டணி இதற்கு முன் ‘பஹதூர்’ மற்றும் ‘பஜ்ரங்கி’ போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது. தற்போது இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here