காதல் காமெடி படத்தில் ஜோடியாக ‘பிக்பாஸ்’ அமீர் – பாவனி! அமீர் இயக்கத்தில் உருவாகிறது.

‘பிக்பாஸ்’ மூலம் தமிழக மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமீர், பாவனி ஜோடி வெள்ளித்திரையில் இணையவுள்ளார்கள். பிக்பாஸில் இருவரது ஜோடிப்பொருத்தம் எல்லோராலும் பாராட்டப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள்.அதையடுத்து அமீர், பாவனி இருவரும் நாயகன் நாயகியாக திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். படத்தில் நாயகனாக நடிக்கும் அமீரே இந்த படத்தை ரொமான்ஸ் காமெடி சப்ஜெக்டில் எழுதி இயக்குகிறார்.

இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கோ. தனஞ்செயன், திண்டுக்கல் லியோனி, விஜய் ஆதிராஜ், நிரூப், பிரியங்கா, ஷாரிக், ரச்சிதா, கிஷோர்,சத்யா, ரியோ முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

நடன இயக்குநர் அமீரும், நடிகை பாவனியும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக வலம் வந்த நிலையில், தற்போது நாயகன் நாயகியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்கள்.

இப்படம் தற்கால இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தில் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, VTV கணேஷ், அலீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு அழகான புரமோ வீடியோவுடன் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here