இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி இருவரும் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ள ‘மாஸ் கார்னிவல்’ படமான BoyapatiRAPO படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன், ராம் பொதினேனியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இருவரும் இணைந்திருக்கும் BoyapatiRAPO படத்தின் ‘ஸ்டார்ட்டர் ப்ளாஸ்ட்’டாக க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.


ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை பெருமையுடன் தயாரித்துள்ளார். இதை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார்.
