விஜய் இயக்கத்தில், ஐந்தாறு ஹீரோயின்கள் நடிப்பில் உருவான ‘BOO.’ மே 27 ஜியோ சினிமாவில் ரிலீஸ்.

கவனம் ஈர்க்கும் கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கி வரும் விஜய் இயக்கத்தில் உருவான படம் ‘BOO.’

இந்த படம் ஜியோ சினிமாவில் நேரடி ஓடிடி பிரீமியராக மே 27; 2023 அன்று வெளியாகவிருக்கிறது.இந்த படத்தில் ரகுல் ப்ரீத்சிங், விஷ்வக் சென், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், வித்யா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது, “இந்தப் படம் கோவிட் – 19 இரண்டாம் அலையின்போது உருவானது. படத்திற்காக நான் நடிகர்களை அணுகியபோது, அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டனர்.

படப்பிடிப்பின் போது நாங்கள் பல கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தோம். இந்தத் படத்தை நம்பித் தயாரிக்க முன்வந்த எனது தயாரிப்பாளர்களான திரு.ராமாஞ்சனேயுலு மற்றும் எம்.ராஜசேகர் ரெட்டி ஆகியோருக்கு நன்றி.

நாட்டின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ ஸ்டுடியோஸூடன் இணைந்ததற்காகவும் அவர்கள் ‘BOO’ படத்தின் உரிமையை பெற்றதற்காகாவும் நன்றி தெரிவிக்கிறேன். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரின் பங்களிப்புடன் இந்த படம் ஒரு முழுமையான வளர்ச்சியைப் பெற்றது.

படத்திற்கு உலகளாவிய பார்வையாளர்களின் வரவேற்பை, விமர்சனங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு – ஜோதி தேஷ்பாண்டே, ராமாஞ்சனேயுலு ஜவ்வாஜி, எம்.ராஜசேகர் ரெட்டி
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பின்னணி இசை – மது ஆர்
ஒலி வடிவமைப்பு – இக்பால்
ஒளிப்பதிவு – சந்தீப் கே விஜய்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைக் காட்சிகள் – ‘ஸ்டண்ட்’ சில்வா
ஒலிப்பதிவு – டி. உதயகுமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here