அகத்தியர்‌, பாதுகாக்கச் சொன்ன ஆறு ரகசியங்கள் என்னவாயிற்று? பதில் சொல்ல ஜூன் மாதம் திரைக்கு வருகிறது ‘பெல்‌.’

வெங்கட் புவன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெல்‌.’

இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ‘ப்ரோகன் மூவிஸ்’ தயாரித்துள்ளது.படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கிற நிலையில் படம் பற்றி இயக்குநரிடம் பேசும்போது, ‌‘‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகத்தியர்‌, பாதுகாக்கப் படவேண்டிய ஆறு ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய ஆறு சீடர்களுக்குச்‌ சொல்லி, அதை பாதுகாக்கவும்‌ கட்டளையிட, ரகசியங்களைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌ இடையே நடந்த போராட்டமே படத்தின்‌ மையக்கதை‌.நான் லீனியர்‌ முறையில்‌ காதல்‌, குடும்பம்‌, ஆக்ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌ சரியான விகிதத்தில்‌ கலந்த படமாக உருவாக்கியிருக்கிறோம். அந்த வகையில் பெல் அனைத்து வயதினருக்கும்‌ ஏற்ற படமாக இருக்கும்‌” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு நிறுவனம்: ப்ரோகன் மூவிஸ்
இயக்குநர்: ஆர்.வெங்கட் புவன்
கதை & வசனம்: வெயிலோன்
ஒளிப்பதிவாளர்: பரணிக்கண்ணன்
படத்தொகுப்பு: தியாகராஜன்
இசை: ராபர்ட்
கலை இயக்குநர்: நட்ராஜ்
சண்டை: ஃபயர்’ கார்த்திக்
பாடலாசிரியர்: பீட்டர் ராஜ்
நடனம்: தீனா
சிகை அலங்காரம்: கணபதி
மக்கள் தொடர்பு: வேலு
புகைப்படம்: குமரேசன்
விளம்பர வடிவமைப்பு: ஷபீர்
நிர்வாக தயாரிப்பாளர்: கிருஷ்ணகுமார் & அழகர்
DI வண்ணமயமானவர்: ராகேஷ்
ஆடை வடிவமைப்பாளர்: சிவகார்த்திக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here