பரபரப்பான திரில்லராக இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் ஜேபி இயக்கும் முதல் படம் ‘BP180.’
கதாநாயகனான டேனியல் பாலாஜி நடிக்க கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ், தமிழ், அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் 12.6. 2023 அன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
நிகழ்வில் நடிகர் டேனியல் பாலாஜி, ‘‘இந்த படத்தின் கதை பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது. என்னுடைய கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். படம் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உருவாகும்” என்றார்.
நடிகை தான்யா ரவிச்சந்திரன், ‘‘இந்த படத்தில் எனக்கு மிக புதுமையான ரோல். க்ரைம் திரில்லர் கதை. ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் ஜே.பி., ‘‘நான் மிஷ்கின் சாரின் மாணவன். அஞ்சாதே படத்திலிருந்து அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், ‘‘தயாரிப்பாளர் அதுல் ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார். அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான். படம் இப்போது தான் துவங்குகிறது. முடிந்தபிறகு இன்னும் நிறைய பேசலாம்” என்றார்.
தயாரிப்பாளர் அதுல் எம் போஸ்மியா, ‘‘குஜராத்திலிருந்து நம்பிக்கையுடன் வந்துள்ளோம். இது எங்கள் முதல் தயாரிப்பு. மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர்” என்றார்.
இயக்குநர் கே பாக்யராஜ், ‘‘தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குநர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் 40 கதைகள் கேட்டு இந்த கதையை ஓகே செய்துள்ளார். படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும்தான் நிறைய வேலை இருக்கிறது. கதை மிக திரில்லாக இருந்தது. ஜேபி, மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இந்த படத்தைச் சிறப்பாக இயக்குவார். படம் மிகச் சிறப்பாக வரும்” என்றார்.
படத்தில் நடிக்கவுள்ள நடிகர் அருள்தாஸ், நடிகை நைனி சாவி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – ATUL INDIA MOVIES
தயாரிப்பாளர் – அதுல் ஏம் போஸ்மியா
எழுத்து இயக்கம் – ஜேபி
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – ராமலிங்கம்
கலை இயக்கம் – ஏ ஆர் மோகன்
எடிட்டிங் – இளையராஜா
புரடக்சன் எக்ஸ்க்யூட்டிவ் – திருநீலகண்டன்
மேக்கப் – ராம் பாபு
உடை வடிவமைப்பு – நாகா சத்யா
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – 8B STUDIOS
மக்கள் தொடர்பு – சதீஸ் (AIM)