மாறுபட்ட திரைக்கதையில் அழகான கமர்ஷியல் படைப்பாக ராதா மோகன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி, வரும் ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படம் ‘பொம்மை.’ பட வெளியீட்டுக்கு முன்னதாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் ராதாமோகன், ‘‘படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்துள்ளது, எஸ் ஜே சூர்யாவிடம் முதலில் கதையைச் சொல்லி விட்டு தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தேன், ஆனால், சில நாட்கள் கழித்து அவரே தயாரிப்பதாக சொன்னார் அப்படித்தான் இந்த படம் தொடங்கியது. அவரும் இயக்குநர் என்பதால், அவ்வப்போது சில விஷயங்கள் சொல்வார் அது எனக்கு உதவியாக இருக்கும்.
இந்த குழுவுடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணி புரிய போகிறேன். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. நல்ல படங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்துள்ளீர்கள், அது போல இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
எஸ் ஜே சூர்யா பேசும்போது, ‘‘இந்தப் படத்தில் வரும் காதல் கதை வித்தியாசமாக இருக்கும். இயக்குநர் ராதா மோகன் சாருக்கு தான் அந்த பெருமை சேரும். அவர் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார்.
பிரியா பவானி சங்கர் படத்தில் பொம்மையாக நடித்துள்ளார், நிஜத்திலும் அவர் பொம்மை தான், அவ்வளவு அழகு. சாந்தினி ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளது.
யுவன் சாரின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. படப்பிடிப்பின் பாதியிலேயே கொரானா வந்துவிட்டது, ஆனாலும் அது படத்திற்கு உதவியாகத்தான் இருந்தது. படத்தின் பின்னணி இசைக்காகவே படத்தைப் பார்க்கலாம், நான் அதற்கு உறுதி அளிக்கிறேன்.
இந்த படத்தின் காட்சிகள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன். இது உணர்வுகளின் அடிப்படையில் உருவான படம். அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசும்போது, ‘‘பொம்மை ஆசைப்பட்டு செய்த மனதுக்கு நெருக்கமான படம். இது ராதா மோகன் சாரின் படம், அவ்வளவுதான். ஒவ்வொரு காட்சியிலும் அவர் வைக்கும் உயிரோட்டம் அப்படியே தெரிந்தது. எஸ் ஜே சூர்யா சாருடன் எனக்கு இரண்டாவது படம், இதில் அவர் தயாரிப்பாளரும்கூட. ஒரு பக்கம் நெருப்பாக இருப்பார் இன்னொரு பக்கம் கூலாக நடிப்பார். வித்தியாசமாக நடிக்க போராடுவார்” என்றார்.
நிகழ்வில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, ழுத்தாளர் பொன் பார்த்திபன், நடிகர்கள் அருள் சங்கர், ‘டவுட்’ செந்தில், நடிகை சாந்தினி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Your writing style is captivating and kept me engaged from beginning to end. It’s a testament to your storytelling ability. To delve deeper, click here.