தொழுகை நடத்துமிடத்தில் வெடிகுண்டு தயாரிப்பு! ‘பாய் – Sleeper Cell’ படத்தின் விளம்பர வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை!

‘பாய் – Sleeper Cell’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ எனப்படும் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இப்போது, படத்தின் கிளிம்ஸ் வெளியாகும் தேதியை அறிவித்து வெளியான விளம்பரக் காட்சி வீடியோ (Promo Video) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வீடியோவில் ஒரு இஸ்லாமியப் பெண் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அவள் பின்னே மூன்று நபர்கள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஒரு செல்போனுக்கு பாய் என்ற நபரிடம் இருந்து கால் வர அந்த தருணத்தில் கிளிம்ஸ் 15-07-23, 7 மணிக்கு ரிலீஸ் என அந்த செல்போனுக்கு ஆங்கிலத்தில் மெசேஜ் வருவது போல் அந்த காட்சி நிறைவுக்கு வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி’ (The kerala story), ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ (Kashmir file), ‘பர்ஹானா’ (Farhaanaa) உள்ளிட்ட படங்களை ஒப்பிட்டு சர்ச்சைக்கு ஆளான நிலையில், இப்போது வில்லங்கமான காட்சியோடு விளம்பரக் காட்சி வெளியாகி பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here