உலகத் தரத்திற்கு இணையான கதை சொல்லாடல் மற்றும் நேர்த்தியான தொழில்நுட்பம் ஆகியவற்றால் ‘Bad Girl’ திரைப்படம் சர்வதேச ராட்டர்டாம் (ஐ. எஃப். எஃப். ஆர்) திரைப்பட விழாவில் NETPAC விருதை வென்றுள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கும் பெருமை சேர்ந்துள்ளது.
இந்த விருது திரைத்துறையின் பயணத்தில்ஒரு புதிய அத்தியாயத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், புதிய சிந்தனைகளை கொண்ட இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.
ஒரு தமிழ் படம் உலக அரங்கில் இவ்வளவு பெரிய விருது பெற்றிருப்பதை திரைத்துறையினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.IFFR 2025 ல் ‘Bad Girl’ படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, அந்தப் படக்குழுவிற்கான வெற்றி மட்டும் அன்று. உலக அரங்கில் இந்திய சினிமாவிற்கும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கும் கிடைத்திருக்கும் வெற்றி.