பா.இரஞ்சித், ஆர் ஜே பாலாஜி இணைந்து விளையாடிய கிரிக்கெட்… நட்புக்காக கைகோர்த்த ‘புளூஸ்டார்’, ‘சிங்கப்பூர் சலூன்’ படக்குழு!

‘புளூஸ்டார்’, ‘சிங்கப்பூர் சலூன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ள நிலையில்  இரண்டு படங்களின் குழுவினரும் இணைந்து கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும், நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் களம் கண்டனர்.

அவர்களுடன் அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் செல்வா, மற்றும் இரண்டு படங்களின் குழுவினரும் கலந்துகொண்டனர். இரண்டு படங்களும் வெற்றியடைய படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஒரே நாளில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடியது தமிழ் சினிமாவில், இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here