பேட் பாய்ஸ் ரைடு ஆர் டை சினிமா விமர்சனம்

அசத்தலான ஆக்சன், அன்லிமிடெட் காமெடி என திரையரங்குகளை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது ‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமாக, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ படத்தின் தொடர்ச்சியாக, போலீஸ் அதிரடி நகைச்சுவை படமாக ‘பேட் பாய்ஸ் ரைடு ஆர் டை.’

காவல்துறையின் துப்பறியும் நிபுணர்களான மைக் லோரி, மார்கஸ் பர்னெட் இருவரும் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்த விசாரணையில் இறங்குகிறார்கள். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட், ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று சொல்லப்பட, அவர் அப்படிப்பட்டவர் இல்லை என் கிற நிலையில் அவர் மீது அப்படியொரு பழி விழுந்ததன் பின்னணியை அலசி ஆராய விசாரணை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக அதிலிருந்து துப்பறியும் நிபுணர்கள் துரத்தப்படுகிறார்கள். வழக்கை முடிப்பதற்காக சட்டத்தை தாண்டி சிலபல விஷயங்களைச் செய்கிற கட்டாயம் உருவாகிறது. அந்த சூழ்நிலை அவர்களுக்கு தந்த கஷ்ட நஷ்டங்களை சுவாரஸ்யத்துடன் நகர்த்தியிருக்கிறார்கள், ‘பேட் பாய்ஸ்’ சீரிஸின் 3-வது பாகத்தை இயக்கிய அதே இயக்குநர்கள் Adil & Bilall.

ஆக்சன் அதிரடியை, வியக்க வைக்கிற சாகசங்களை மைக் லோரியாக வருகிற வில் ஸ்மித் முழுமையாக கவனித்துக் கொள்ள, படம் முழுக்க காமெடியால் நிறைத்திருக்கிறார் மார்கஸ் பர்னெட்டாக வருகிற மார்ட்டின் லாரன்ஸ். காட்சிகள் தொய்வடையும் போதெல்லாம், அதை போக்கும்விதமாக அமைந்திருக்கிறது மார்ட்டின் லாரன்ஸின் காமெடி களேபரம். மிகமிக சீரியஸாக தருணத்தில் பிரமாண்ட முதலையுடன் பேச்சு வார்த்தை நடத்தி ரத்தம் சிந்துவதெல்லாம் ரகளையின் உச்சம்.

வில் ஸ்மித்தின் ஆக்சன் அதகளம் வழக்கம்போல் உற்சாகமாக வெளிப்பட்டிருக்கிறது. வில்லன் யார் என்பதை சுலபமாக கணிக்க முடிவதிலிருந்து சில குறைகள் இருந்தாலும், 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு’ என படக்குழு தந்த உத்தரவாதத்தை பெருமளவு நிறைவேற்றியிருக்கிறது படக்குழு.

Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith ​​with Tiffany Haddish and Joe Pantoliano என மற்றவர்களின் நடிப்பு கதைக்களத்தின் பரபரப்புக்கு பலம் சேர்த்துள்ளது.

இந்த படத்தை இந்தியாவில் ‘சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா’ தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், ஐ மேக்ஸிலும் ஜூன் 6, 2024 அன்று வெளியிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here