பூமர் அங்கிள் சினிமா விமர்சனம்

சுந்தர் சி பாணியில் உருவாகியிருக்கும் காமெடி படம்.

யோகிபாபுவின் தந்தை பல வருடங்கள் முன் கண்டுபிடித்த சூப்பர் மேன் ஃபார்முலாவை அபகரிக்க, யோகிபாபுவின் மனைவியான ரஷ்யப் பெண் முயற்சி செய்கிறார். அவரிடமிருந்து ஃபார்முலாவை காப்பாற்ற களமிறங்கும் யோகிபாபு சந்திக்கும் சவால்களும் ஆபத்துகளுமே மிச்சமீதி கதை… இயக்கம் ஸ்வதேஷ்

பிரமாண்டமான அரண்மனைக்குச் சொந்தக்காரராக வரும் யோகிபாபு வழக்கமான ஸ்டைலில் கொஞ்சமாய் கலகலப்பூட்டுகிறார்.

ஓவியா கவர்ச்சியாக ஆடியிருப்பதோடு, சூப்பர் மேனாக தோன்றி அதிரடி ஆக்சனிலும் ஈடுபட்டிருக்கிறார்.

யோகிபாபுவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவரது அரண்மனைக்குள் நுழையும் ரோபோ சங்கர், சேஷு, கே.பி.ஒய். பாலா, பழைய ஜோக் தங்கதுரை கூட்டணி செய்யும் கலவர களேபரங்கள் ஓரளவு சிரிப்பூட்டுகிறது.

அந்தக் கால சக்திமானுக்கு வயதாகி பூமர் அங்கிளாக தோன்றுகிற காட்சியொன்று படத்திலிருக்கிறது. அந்த பாத்திரத்தை ஏற்றிருக்கும் எம் எஸ் பாஸ்கரிடமிருந்து சுவாரஸ்யமான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

ரஷ்யப் பெண், அவருக்கு அசிஸ்டன்டாக வருபவர் என மற்றவர்களின் நடிப்பு நிறைவு. சீனியர் நடிகை சோனாவுக்கும் சிம்பிளான ஒரு கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள்.

‘ஜிங்கா புங்கா’ பாடலில் இடம்பெறும் சிறுவர் சிறுமிகளின் குஷியான ஆட்டத்தை நம் வீட்டுப் பிள்ளைகள் ரசிப்பார்கள்.

ஒளிப்பதிவில் சுபாஷ் தண்டபாணி, கலை இயக்கத்தில் பி ஆனந்த் இருவரின் உழைப்பும் நேர்த்தி.

சூப்பர் மேன் ஃபார்முலா சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப சங்கதிகளை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்.

பிரபலமான நடிகர், நடிகைகள் கைவசமிருந்தும் திரைக்கதையில் கவனம் செலுத்தாததால் பூமர் அங்கிளுக்கு பாஸ்மார்க் மட்டுமே போட முடிகிறது!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here