நரம்பியல் மற்றும் மனவள சிகிச்சைக்கு அதிநவீன ஏற்பாடுகள்! புத்தி (Buddhi) கிளினிக் சென்னை தேனாம்பேட்டையில் உருவாக்கிய புதிய வளாகத்தின் சிறப்புகள் இதோ… 

நரம்பியல், மனவளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் ஆகியவற்றுக்கு உகந்த சிகிச்சையளிக்க சிறப்பானதொரு இடமாக அமைந்துள்ளது புத்தி (Buddhi) கிளினிக்!

சென்னை தேனாம்பேட்டையில், உலக தரத்தில் இயங்கும் புத்தி கிளினிக் சிகிச்சை மையம் தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக்க புது பரிமாணத்துடன் புதிய கட்டட வளாகத்தில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது!

இந்த புது வளாகம் நான்கு மண்டலங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

1. மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை, பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், பரிசோதனைக் கூடம், மருந்தகம் உள்ளிட்டவை அடங்கியது The Alchemist Zone என்ற மண்டலம்!

2. நரம்பியல் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிகிச்சை முறைகள், அவற்றை செயல்பட வைக்கும் செயல்முறைகள், யோகா பயிற்சிகள், மன, குண இயல்புகளின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பின் அடிப்படையில் சிகிச்சை முறை உள்ளிட்டவை அடங்கியது The Mindfulness Zone என்ற மண்டலம்!

வலி மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றுக்கான சிகிச்சை முறைகளை செயல்படுத்த தனிஅறைகள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவை அடங்கியது The Rehab Zone என்ற மண்டலம்!

4. ஆயூர்வேதா (Ayurveda) நேச்சுரோபதி (Naturopathy), அக்குபஞ்சர் (Acupuncture), அக்குபிரஷர் (Acupressure), ரெப்லெக்ஸாலஜி  (Reflexology) போன்ற சிகிச்சை முறைகளின் செயலாக்கம் உள்ளிட்டவை அடங்கியது The Holistic Care Zone என்ற மண்டலம்!

மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகள் தவிர
நூலகம், உணவகம் மற்றும் பயிற்சி அறை / பயிற்சி வகுப்புகள் அடங்கிய The Resource Zone என்ற பிரிவும் செயல்பாட்டில் இருக்கும்.

இந்த புதிய வளாகத்தின் துவக்க விழா 1. 6. 2022 புதன் கிழமையன்று நடந்தது. சுதா சேஷய்யன் (The of TN Dr. MGR Medical University, Prof. Dr. Sudha Seshayyan,Hon. Vice Chancellor) சுனிதா ரெட்டி (Ms. Suneeta Reddy, Managing Director of Apollo Hospitals) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் புத்தி கிளீனிக்கின் வசதிகள் பற்றி புத்தி கிளீனிக் நிறுவனர் டாக்டர் என்னபடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி (Dr. Ennapadam S Krishnamoorthy, Founder of Buddhi Clinic) பேசும்போது,
உலக தரத்தில் புத்தி கிளீனிக் சிகிச்சை மையம் சிறந்ததோர் அமைப்பாக செயல்பட்டு சேவை செய்திடவே இந்த புதிய முயற்சி! சிகிச்சைக்காக வருவோரின் உடல்நிலை மற்றும் மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் புத்தி கிளீனிக்கின் செயல்பாடுகள் அமையும். தனித்தனி சிகிச்சை பிரிவுகளில் தனித்தனி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
ஒருங்கிணைந்த முறையில் தான் அனைத்து செயல்பாடுகளும் அமைந்திடும்.

அனைத்து சிகிச்சை முறைகளும் அதற்கேற்ற வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற புத்தி கிளீனிக் புராதன பழமை வாய்ந்த சிகிச்சை முறைகளையும் நவீன செயல் முறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான் இதன் சிறப்பு!

சுனிதா ரெட்டி (Ms. Suneeta Reddy, Managing Director of Apollo Hospitals) பேசுகையில் நரம்பியல், மனவளம் முதலானவற்றுக்குபுத்தி கிளீனிக் ஆற்றிவரும் பணி சிறப்பானது. மருத்துவச் சேவையில் அப்போலோ மற்றும் புத்தி கிளீனிக் இரண்டும் சீரிய முறையில் செயலாற்றி வருகிறதென்றால் மிகையில்லை” என்றார்.

சுதா சேஷய்யன் (The of TN Dr. MGR Medical University, Prof. Dr. Sudha Seshayyan,Hon. Vice Chancellor) பேசுகையில், புத்தி கிளீனிக் தனது வளர்ச்சிப் பாதையில் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளது. புத்தி கிளீனிக் சிறப்பானதொரு சேவை மையமாக செயல்பட்டு உடல் நலம், மனவளம் தவிர ஆட்டிஸம் Autism, எபிலெப்சி Epilepsy, டிமென்ட்யா Dementia உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மிகச் சிறப்பான சிகிச்சை முறையை செயல்படுத்தி வருகிறது!
நியூரோபிசிசியாட்ரி சிகிச்சையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பெருமைக்குரிய விஷயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here