உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது விழாவாகவே கொண்டாடப்படுகிறது.
பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் பாரம்பரிய ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலம்!
அப்படியான கேக் தயாரிப்பதற்கான கேக் மிக்ஸிங் நிகழ்வு (Cake Mixing Ceremony) சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் நடந்தது. நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குநர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சேர்மன் ரமேஷ் குமார், நிர்வாக இயக்குநர் குழந்தையன், துணைத் தலைவர் சந்திரசேகர், கார்பரேட் எஸ்.எம்.பி. இயக்குநர் தேவேந்திரன் உள்ளிட்ட பார்க் எலன்சா ஹோட்டல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.