‘குட்நைட்’ மணிகண்டனின் எதார்த்த நடிப்புக்கு வாய்ப்பு தரும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்! ‘சினிமாக்காரன்’ எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார்.

‘ஜெய்பீம்’, ‘குட்நைட்’ படங்களின் நாயகன் மணிகண்டன், சான்வி மேகனா, ‘ஜோக்கர்’ பட ஹீரோ குரு சோமசுந்தரம், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த தனம், ‘மண்டேலா’, ‘சேத்துமான்’ படங்களில் நடித்த பிரசன்னா பாலச்சந்திரன், ‘அயலி’ வெப் சீரிஸில் நடித்த ஜென்சன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தை ராஜேஷ்வர் கலிசாமி இயக்க, ‘சினிமாக்காரன்’ எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார்.

நடுத்தர குடும்பத்தில் வாழக்கூடிய இளைஞன் குடும்பத்தை நடத்த எடுத்துக்கொள்ளும் சவாலான சாகசங்களே படத்தின் மையக்கரு. கதையின் கதாநாயகனான மணிகண்டன், கோயம்புத்தூரில் ஃபிளக்ஸ் அச்சிடும் சாதாரண நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறார்.

பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் நடக்கவிருக்கிறது. படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

‘கதை பல குடும்பங்களில் சாதாரணமாக நடக்கக்கூடிய சூழ்நிலைகளை கொண்டிருப்பதால் நகைச்சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்திருக்கும்’ என்கிறது படக்குழு.

மணிகண்டன் சமீபத்தில் வெளியான ‘குட் நைட்’ படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இந்த படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என நம்பலாம். அதற்கேற்ற கதைக்களம் அமைந்துள்ளது.

படக்குழு:-
பட நிறுவனம்: சினிமாக்காரன்
இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி
கதை: பிரசன்னா பாலசந்திரன் & ராஜேஷ்வர் காளிசாமி
திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்
தயாரிப்பு: செ. வினோத் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்
இசை: வைசாக்
படத்தொகுப்பு: கண்ணன்
கலை வடிவமைப்பு: சுரேஷ் குமார்
ஒலிப்பதிவு: விக்ரமன்
சண்டைப்பயிற்சி: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்
உடை வடிவமைப்பு: மீரா
விளம்பர வடிவமைப்பு: இளங்கவின்
மக்கள் தொடர்பாளர்: சுரேஷ் சந்திரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here