‘லவ்வர்’  மணிகண்டன் நடிக்க, சினிமாக்காரன் வினோத்குமார் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘குட்நைட்’ , ‘லவ்வர்’ என தொடர்ச்சியாக ஹிட் படங்களில் கதைநாயகனாக நடித்து கவனம் ஈர்த்த மணிகண்டன் நடிக்க, சினிமாக்காரன் நிறுவனத்தின் எஸ்.வினோத்குமார் தயாரித்துவருகிற தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ என தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில்,  சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒரு சாதாரண  நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர்  காளிசாமி மேலும் பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் படம் ஃபேமிலி காமெடி டிராமாவாக உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்மபித்த படத்தை இப்போது மார்ச் மாதம் முடித்திருக்கிறோம். இரண்டு ஷெட்யூலாக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என லைவ்வாக நிறைய இடங்களில் படமாக்கினோம்” என்றார்.

இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

படக்குழு:

இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி,
கதை: பிரசன்னா பாலசந்தரன் & ராஜேஷ்வர் காளிசாமி,
திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்,
தயாரிப்பு: செ. வினோத்குமார்,
நிறுவனத்தின் பெயர்: சினிமாக்காரன்,
ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்,
இசை: வைசாக் பாபுராஜ்,
படத்தொகுப்பு: கண்ணன் பாலு,
கலை வடிவமைப்பு: சுரேஷ் கல்லேரி,
சண்டைப்பயிற்சி: தினேஷ் சுப்புராயன்,
உடை வடிவமைப்பு: மீரா,
மக்கள் தொடர்பாளர்: சுரேஷ் சந்திரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here