ஆடம்ஸ் இயக்குநராக அறிமுகமாகும் ‘கேன்’ படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக்!

ஆடம்ஸ் சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக புகழ்பெற்றவர். அவர் முதன்முறையாக இயக்கியுள்ள ‘கேன்’ படத்தின் புதுமையான வடிவத்தில் அமைந்த அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த படம் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும் விதத்தில், நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சகமான அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், விடிவி கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், காத்துக் கருப்பு கலை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதாபாத்திரங்களைக் கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அது படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க, குளிர் சூழ்ந்த ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தினை ஷோபனா கிரியேசன்ஸ் டி.கருணாநிதி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.

படம், திரையரங்கில் சொட்டச் சொட்ட காதலுடன் ஜில்லென கொண்டாடும்படியாக இந்த கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. முன்னதாக விரைவில் டீசர், டிரெய்லர் வெளியாகவுள்ளது.

சன் டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படங்களில் நான்கு வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படக்குழு:
எழுத்து இயக்கம்: ஆடம்ஸ்
இசை: அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு: பிரகாஷ் ருத்ரா
எடிட்டர்: மதன் ஜி
கலை இயக்குநர்: என் கே ராகுல்
நடனம்: ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பு: சுகிர்தபாலன்
ஸ்டில்ஸ்: லால்
மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here